சென்னை மருத்துவர் மெரீனா கடலில் மூழ்கி தற்கொலை

0 22252
சென்னையில் மருத்துவர் ஒருவர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் மருத்துவர் ஒருவர் மெரினா கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை விருகம்பாக்கத்தைசேர்ந்த மல்லிகார்ஜூன் என்பவர்,  குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மாலை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே காரை நிறுத்திய அவர், தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், இதற்கு யாரும் காரணமில்லை என்றும், தனது தம்பிக்கு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

காரை வீடியோ எடுத்து, லொக்கேசனை வாட்ஸ் ஆப் மூலம்  அனுப்பி விட்டு, செல்போனுடன் கடலில் விழுந்து இறந்துள்ளார். புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், விவேகானந்தர் இல்லம் எதிரே கரை ஒதுங்கிய உடலை மீட்டனர்.

மல்லிகார்ஜுனனுக்கு, திருமணம் தொடர்பாக வீட்டில் பேச்சு வார்த்தை நடந்ததாகவும், அதிலிருந்தே வீட்டில் இருபவர்களிடம் எரிச்சலுடன் நடந்து கொண்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments