அதிகரிக்கும் உயிரிழப்பு அச்சத்தில் அமெரிக்கர்கள்

0 1870
அதிகரிக்கும் உயிரிழப்பு அச்சத்தில் அமெரிக்கர்கள்

அமெரிக்காவில் கொரோனா நோயின் தாக்கம் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 78 ஆயிரத்து 600ஐக் கடந்துள்ளது. 

சீனாவின் வூகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்காவை மையமாகக் கொண்டு பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை 13 லட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 ஆயிரத்து 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பிரேசிலில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 750 பேர் உயிரிழந்துள்ளனர்.2ம் உலகப் போரின் வெற்றியை இங்கிலாந்து கொண்டாடி வரும் நிலையில் அந்நாட்டு ராணி எலிசபெத் தொலைக்காட்சியில் பேசும்போது, கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை ஒப்புக் கொண்டுள்ள அவர், தங்கள் நாட்டின் வீதிகள் காலியாக இல்லை என்றும் மக்களின் அன்பால் அவை நிறைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக கனடாவில் 20 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜூன் 15ம் தேதி வரை மற்ற நாடுகளின் எல்லைகளை மூட அறிவுறுத்தி உள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை வாழ்க்கை முறையில் மாற்றத்தை எதிர்கொள்ளவேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.குவைத்தில் நோய்த் தொற்றை சமாளிக்கும் விதமாக நடப்பு மாதம் இறுதிவரை பொதுமுடக்கத்திற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments