கொடூர முகம் காட்டும் கொரோனா...விழி பிதுங்கும் உலக நாடுகள்

0 1440

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டி விட்டது. பாதிப்பு, 38 லட்சத்து 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 13 லட்சம் பேர், குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர். கொரோனா, கொடூர முகம் காட்டுவதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிர்ப்பலியும் நாளுக்கு உயர்ந்து, உலக நாடுகள் விழி பிதுங்கி, தவித்து வருகின்றன.

அமெரிக்காவில், ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்து 63 ஆயிரத்தை நெருங்கியது. ஒரே நாளில் 2,500 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 73 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

இங்கிலாந்தில், ஒரே நாளில் 649 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டி விட்டது. அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 111 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து ஆயிரத்தை தாண்டி விட்டது.இத்தாலியில் ஒரே நாளில் 369 பேர், கொரோனாவுக்கு இரை ஆனதால், பலி எண்ணிக்கை 29 ஆயிரத்து 700 ஐ நெருங்கி வருகிறது.

ஸ்பெயினில் ஒரே நாளில் 3 ஆயிரத்து 121 பேர் பாதிக்கப்பட, வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 2 லட்சத்து 53 ஆயிரமாக 682 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் 244 பேர் உயிரிழந்ததால், கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

பிரான்சில் உயிரிழப்பு, 25 ஆயிரத்து 500 ஐ தாண்ட, பெல்ஜியத்தில் ஒரே நாளில் 323 பேர் உயிரிழந்ததால், 8 ஆயிரத்து 400 ஐ நெருங்கி உள்ளது.பிரேசிலில் உயிரிழப்பு 8 ஆயிரத்தையும், ஜெர்மனியில் 7 ஆயிரத்தையும் நெருங்கி விட்டது.

ரஷியாவை பொறுத்தவரை, கடந்த 4 நாட்களாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர்
எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 10 ஆயிரத்து 559 பேர் பாதிக்கப்பட்டு, அதன் எண்ணிக்கை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 929 ஆக உயர்ந்தது. அங்கு, ஆயித்து 537 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் 37 லட்சத்து 76 ஆயிரத்து 454 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிர்ப்பலி 2 லட்சத்து 61ஆயிரத்து 168 ஆக உயர்ந்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் 48 ஆயிரத்து 903 பேர் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாகவும், 12 லட்சத்து 74 ஆயிரத்து 574 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments