தமிழகத்தில் மேலும் 771 பேருக்கு கொரோனா

0 11515

தமிழகத்தில், வரலாறு காணாத வகையில் ஒரே நாளில், 771 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. சிகிச்சை பலனின்றி 2 பேர் மரணம் அடைந்ததால் கொரோனா உயிர்ப்பலி 35ஆக உயர்ந் துள்ளது. இதுவரை, குணமடைந்தோர் எண்ணிக்கை 1,500ஐ தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக ஏறுமுகமாக உயர்ந்து வருவதால், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறையினர், தீவிர பணிகளை முடுக்கி விட்டுள் ளனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு, தமிழகத்தில் ஒரே நாளில், 771 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதில், ஆண்கள் - 575 பேர் என்றும், பெண்கள் - 196 பேர் என்றும் சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆக மொத்தம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது.

ஒருபக்கம் பாதிப்பு உயர்ந்து வந்தாலும், மற்றொருபக்கம் குணம் அடைந்து, வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, ஆயிரத்து 516 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பி விட்டனர்.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் ஒரே நாளில் 2 பேர் மரணம் அடைந்ததால் கொரோனா உயிர்ப்பலி 35 ஆக உயர்ந்தது. இவர்களில் 68 வயது முதியவர் சென்னை - ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 59 வயது மற்றொரு முதியவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் இறந்தனர்.

வயது வாரியாக பார்க்கும் போது, 12 வயதுக்கு உட்பட்டவர்களில், 124 சிறுவர்கள் உள்பட மொத்தம் 254 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில் 2 ஆயிரத்து 951 ஆண்கள், 2 திருநங்கைகள் உள்பட மொத்தம் 4 ஆயிரத்து 208 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 128 பெண்கள் உள்பட மொத்தம் 367 பேர், பாதிக்கப்பட்டு உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments