சென்னையில் இதுவரை 2008 பேருக்கு கொரோனா பாதிப்பு

0 2160

சென்னையில் இன்றைய நிலவரப்படி இதுவரை 2008 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 327 குணமடைந்த நிலையில் 20 பேர் உயிரிழந்தனர்.

1652 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள மண்டல வாரி பட்டியலின் படி, திருவொற்றியூரில் 32 பேரும், மணலியில் 13 பேரும், மாதவரத்தில் 27 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தண்டையார் பேட்டையில் 149 பேரும், ராயபுரத்தில் 321 பேரும், திரு.வி.க. நகரில் 395 பேரும் பாதிக்கப்பட்டனர். அம்பத்தூரில் 98 பேரும், அண்ணா நகரில் 169 பேரும், தேனாம்பேட்டையில் 230 பேரும் பாதிக்கப்பட்டனர். கோடம்பாக்கத்தில் 327 பேரும், வளசரவாக்கத்தில் 146 பேரும், ஆலந்தூரில் 11 பேரும் பாதிக்கப்பட்டனர். அடையாறில் 53 பேரும், பெருங்குடியில் 15 பேரும், சோழிங்கநல்லூரில் 13 பேரும் பாதிக்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments