ஈராக்கில் பதுங்கியிருந்த ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம் அழிப்பு

0 843

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் இருந்த முகாம்கள் மீது இங்கிலாந்து விமானப்படையினர் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி உள்ளது.

தலைநகர் பாக்தாத் நகரின் புறநகர் பகுதியில் சில இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் முகாமிட்டிருந்தனர். மேலும் அங்கிருந்த மலைப்பகுதியில் சில குகைகளிலும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர். இதையடுத்து சைப்ரஸ் நகரில் முகாமிட்டிருந்த இங்கிலாந்து விமானப் படையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அங்கு விரைந்த இரு டைஃபூன் வகை விமானங்கள் நள்ளிரவில் குண்டு மழை பொழிந்துள்ளன. இதற்காக பாவிவே 4 என்ற நவீன வகை ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் லேசர் உதவியுடன் துல்லியமாகத் தாக்கும் தன்மை கொண்டவை. இந்தத் தாக்குதலில் ஏராளமான ஐஎஸ் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments