ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பல்கலைகழகங்கள், கல்லூரிகள் திறக்கப்படும்

0 4049
நாடு முழுவதும் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திறக்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள், பல்கலைகழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதுமுள்ள மாணவர்களிடம் இணைய வழியில் கலந்துரையாடிய மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பழைய மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கலாம் என அறிவித்துள்ளார்.

அதே போல் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments