தமிழகம் முழுவதும் விதிமீறல்களில் ஈடுபட்ட 1,87,623 பேர் கைது

0 613

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியது தொடர்பாக தற்போது வரை, 1 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கை மீறி தேவையின்றி வெளியே சுற்றித் திரிபவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்தும், வாகனங்களை பறிமுதல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில் தமிழகம் முழுவதும் விதிமீறல்கள் தொடர்பாக 1 லட்சத்து 75 ஆயிரத்து 238 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 48 ஆயிரத்து 342 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்த 1 லட்சத்து 87 ஆயிரத்து 623 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 76 லட்சத்து 96 ஆயிரத்து 544 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments