மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

0 4530

கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புக்கான, 12 ஒருங்கிணைப்பு குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தவும், கண்காணிக்கவும், அவசிய சேவைகள் தடைபடதா வண்ணம் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் 40 பேர் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

குழுக்கள் அமைக்கப்பட்ட பிறகு, இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், தடையுத்தரவுகளை கண்டிப்பாக அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பிற மாநிலங்களில் இருந்து வரவேண்டிய அத்தியாவசியப் பொருட்களை இடையூறின்றி கொண்டுவருவது குறித்தும், கொரோனா விரைவுப் பரிசோதனைக்கான rapid test kit விநியோகம் பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர்களுடன் பிரதமர் வரும் 11ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ள நிலையில், தமிழகத்தின் நிலைப்பாடு பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments