மருத்துவ ஆக்சிஜன் தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்-மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

0 777

மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் தடையின்றிக் கிடைக்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அனைத்து மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் குமார் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், மருத்துவமனைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் தடையின்றிக் கிடைப்பதில் கவனம் செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ ஆக்சிஜன், சிலிண்டர்கள், நீர்ம ஆக்சிஜன் கொள்கலன் ஊர்திகள், சிலிண்டர் வால்வுகள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆலைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேற்கண்ட பொருட்களின் போக்குவரத்து, மாநில எல்லைகளைத் தாண்டிக் கொண்டு செல்வது, மேற்கண்ட ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சென்று திரும்புவது ஆகியவற்றுக்குத் தடையின்றி அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments