கொரோனா இறப்புக்குக் காப்பீடு வழங்காமல் மறுக்கக் கூடாது -காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஆயுள் காப்பீட்டுக் குழு அறிவுறுத்தல்

0 721

கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தோர் குடும்பத்தினரின் இழப்பீடு கோரும் விண்ணப்பங்களை ஆயுள் காப்பீட்டு நிறுனங்கள் மறுக்கக் கூடாது என ஆயுள் காப்பீட்டுக் குழு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் 118 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்தினர் காப்பீட்டு நிறுவனங்களில் இழப்பீடு கோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்பாராத, கட்டுப்படுத்த முடியாத செயல் எனக் கூறப்படும் விதி, கொரோனா இறப்புக்குப் பொருந்தாது என ஆயுள் காப்பீட்டுக் குழு தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்களின் இழப்பீடு கோரிக்கையை காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

இத்தகைய துன்பநேரத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தாமதமில்லாமல் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments