பொருளாதாரத்தை சீரமைக்க மறுபட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் -ஜெய்ராம் ரமேஷ்

0 727

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, ஊரடங்கு ஏற்படுத்தும் வர்த்தக இழப்புகள் உள்ளிட்டவற்றை சரி செய்ய வேண்டுமானால், மத்திய அரசு திருத்தப்பட்ட மறு பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் கணக்குகள், கொரோனாவால் நிலைகுலைந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரா நிலைமையை சீரமைக்க மறுபட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments