அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்

0 5288

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர். காணொலிக் காட்சி மூலம், மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்பட்ட இந்த ஆலோசனையின்போது, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்கவும் நோய் தொற்று பரவாமல் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கண்காணிப்பும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் கட்டத்தில் உள்ள நிலையில் அது மூன்றாம் கட்டத்தை எட்டாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு முடிவை மத்திய அரசு எடுக்கும்பட்சத்தில் அல்லது மாநிலங்கள் முடிவு எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவிக்கும்பட்சத்தில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments