200 பைலட்டுகளின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏர் இந்தியா

0 1336

விமான சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டதை அடுத்து 200க்கும் மேற்பட்ட பைலட்டுகளின் பணி ஒப்பந்தத்தை ஏர் இந்தியா தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இந்த 200 பேரும் பணிஓய்வு பெற்ற பிறகு ஒப்பந்த அடிப்படையில் ஏர் இந்தியாவில் பைலட்டுகளாக நியமிக்கப்பட்டனர். கொரோனா தொற்று காரணமாக அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் ஏர் இந்தியா கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளது.

ஏற்கனவே கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா கொரோனா முடக்கத்தால் மேலும் பல கோடி இழப்பை சந்தித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments