வீட்டில் இருந்தபடி குறுஞ்செய்தி மூலம் பணம் எடுத்துக் கொள்ளலாம்

0 8270

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கூட்டுறவு வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வங்கி சேவை உங்கள் வீட்டு வாசலில்" என்ற சேவையை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அதன் மூலம் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் 2000 ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை வீட்டில் இருந்தபடியே குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையை முதல் முறை பயன்படுத்தினால் கட்டணம் இல்லை எனவும், 2ஆவது முறை பயன்படுத்தினால் 100 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேபோன்று, இந்த சேவை குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்ள www.tnscbank.com என்ற இணையதளத்திற்கு சென்று பார்க்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments