கொரோனா யுத்தம்.. நிமிடத்திற்கு நிமிடம் எகிறும் பாதிப்பு..!

0 5189

ஒரே நாளில் 386 பேருக்கு கொரோனா உறுதி ஆனதால், இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 38 ஐ எட்டி உள்ளது.

கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் உயர்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் எகிறி வருகிறது. மஹாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்பு 265 ஐ எட்டி உள்ளதாக அறிவித்த அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 110 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதால், இதன் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி - 120 , கர்நாடகா - 101 , உத்தரபிரதேசம் - 103, தெலங்கானா - 97, ராஜஸ்தான் - 93, ஆந்திராவில் 87பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 386 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 779 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் குறித்து பரிசோதனை நடத்த நாடு முழுவதும் 126 ஆய்வகங்களுக்கும் , 51 தனியார் ஆய்வகங்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதே போன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக முழுவதும் 21 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு ஆறே முக்கால் லட்சம் பேர் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments