அனைத்து வங்கிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும் - IOB அறிவிப்பு

0 8769

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும், காலை 10 மணி முதல், மாலை 4 மணி வரையில் இயங்க வேண்டும் என, வங்கிகள் கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள், பல்வேறு நிவாரண நிதியுதவிகளை அறிவித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிதியுதவிகளையும், முதியோர் ஓய்வூதிய தொகையையும், அவற்றின் பயனாளர்களான பொதுமக்கள், வங்கிகளுக்கு நேரில் வந்து தடையின்றி பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு, வாடிக்கையாளர்கள் வரும்போது, சானிடைசரால் கைகளை தூய்மை செய்து கொள்வதை உறுதி செய்வதோடு, குறைந்தபட்சம் ஒரு மீட்டர் என்ற சமூக விலகலை கடைபிடிக்கவும், வங்கிகள் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments