வெளியூருக்கு செல்வோர் எங்கு "வாகன பாஸ்" வாங்க வேண்டும்?

0 5993

அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியூர்களுக்கோ வெளிமாவட்டங்களுக்கோ பயணம் மேற்கொள்பவர்களுக்கு காவல்துறை பாஸ் வழங்குவது இல்லை.

திருமணம், துக்க நிகழ்ச்சி, உடல்நலம் ஆகிய 3 காரணங்களுக்காக மட்டுமே பயண பாஸ்கள் வழங்கப்படுகின்றன. சென்னையிலிருந்து வெளியூர் செல்வோர், சென்னை மாநகராட்சி ஆணையர் மூலம் பெறலாம்.

மாநகராட்சிகளில் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு செல்ல மண்டல அதிகாரி  ( Zonal Officer) பாஸ் வழங்குவார். மாவட்டத்துக்கு உள்ளாகவே பயணிப்போருக்கு தாசில்தார் மூலமாக பாஸ் வழங்கப்படுகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமானால் எங்கிருந்து பயணத்தை துவக்குகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாஸ் வாங்க வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments