ஊரடங்கால் சென்னையில் உருவாகும் குப்பையின் அளவு குறைந்துள்ளது..!

0 1591

ஊரடங்கு உத்தரவின் காரணமாக சென்னையில் உருவாகும் குப்பையின் அளவு கணிசமாக குறைந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் இருப்பதால், பல நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்காமல் உள்ளன. வீடுகளுக்கு வெளியே மக்களின் நடமாட்டம் இல்லாததோடு, பயணங்கள் மற்றும் கூட்டம் கூடுவதற்கும் அனுமதி இல்லை.

இதன் காரணமாக சென்னையில் தினசரி சேகரிக்கப்படும் திடக்கழிவுகளின் அளவு 3 ஆயிரத்து 665 டன்னாக குறைந்ததுள்ளது.

சென்னையில் 15 மண்டலங்களில் வழக்கமாக 5 ஆயிரத்து 100 டன்னுக்கு குறையாமல் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெளியேற்றவும் மறுசுழற்சி செய்யவும் படுகிறது.

இந்த அளவைவிட சுமார் 1450 டன் அளவு குப்பைகள் குறைந்துவிட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments