கொரோனா: ஸ்பெயின் இளவரசி மரணம்

0 17750

கொரோனா தொற்றுக்கு ஸ்பெயின் இளவரசி மரிய தெரசா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 86.

உலகில் கொரோனா தொற்று நோயால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் 2ஆவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 840க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் அந்நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

புதிதாக 7 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஸ்பெயினின் கொரோனாவில் இருந்து சுமார் 12 ஆயிரத்து 200 பேர் குணமான நிலையில், 54 ஆயிரத்து 900 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 4 ஆயிரத்து 100 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், ஸ்பெயின் இளவரசியான மரிய தெரசா கொரோனாவால் 26ம் தேதி உயிரிழததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசரான 6ம் பிலிப்பின் (felipe) உறவினரான (cousin) அவர், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மரணமடைந்துள்ளார். இதையடுத்து அவரின் இறுதி சடங்கு ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் (madrid) வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. மரிய தெரசாவின் சகோதரரும், இளவரசருமான சிக்ஸ்டோ என்ரிக் டி போர்போன் (sixto enrique de borbon) பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்தத் தகவலை தெரியபடுத்தியுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1933ம் ஆண்டு பிறந்த மரிய தெரசா, அந்நாட்டிலேயே தனது கல்வியை முடித்து, முதலில் பாரீஸ் சோர்போன் பல்கலைக்கழகத்திலும் பின்னர் மேட்ரிட் கம்ப்ளுடென்ஸ் பல்கலைகழகத்திலும் பேராசிரியையாக பணிபுரிந்தார்.

தனது சமூக பணிகளாலும், நேர்பட பேசும் தன்மையாலும் மரிய தெரசா, ரெட் பிரின்சஸ் என்று அழைக்கப்பட்டு வந்தார். மரிய தெரசாவின் மரணம், உலகில் அரச குடும்பத்தில் கொரோனாவுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பாக கருதப்படுகிறது. பிரிட்டனில் அந்நாட்டு இளவரசர் சார்லசுக்கு அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments