அமெரிக்கா முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2000ஐ தாண்டியது

0 2879

கொரோனா தொற்று நோயின் மையப்புள்ளியாக மாறிய அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் ஏறத்தாழ 20 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 428 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 515 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் 2 ஆயிரத்து 211 பேர் இதுவரை கொரோனாவுக்கு மரணித்துள்ளனர்.

சிகிச்சை முடிந்து 3 ஆயிரத்து 200 பேர் வீடு திரும்பியுள்ள நிலையில் 2 ஆயிரத்து 666 பேர் அபாய கட்டத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க யுஎஸ்என்எஸ் கம்போர்ட் என்ற மருத்துவக் கப்பலை அப்பகுதியில் நிறுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் 15 மாகாணங்களை பேரழிவுப் பகுதிகளாகவும் அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு மாகாணங்களில் உள்ள சுமார் இரண்டரைக் கோடி மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதனிலைத் தேர்வு நியூயார்க் நகரில் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் ஆண்ட்ரூ குவோமோ தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments