அனல்மின் நிலையங்களில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி உள்ளது - அமைச்சர் பிரகலாத ஜோசி

0 846

அனல் மின் நிலையங்களில் 24 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத ஜோசி தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் அனல்மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி வழங்குவதை இன்றியமையாப் பணியாக அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மார்ச் 26ஆம் தேதி நிலவரப்படி அனல் மின் நிலையங்களில் 24 நாட்களுக்குத் தேவையான 4 கோடியே 18 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொழிற்சாலைகளுக்கும் மின் நிலையங்களுக்கும் போதுமான அளவு நிலக்கரி கிடைப்பதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரகலாத ஜோசி குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments