நெடுஞ்சாலைகளில் தவிப்போருக்கு உணவு, குடிநீர் வழங்க சுங்கச்சாவடி நிர்வாகத்தினருக்கு மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

0 556

தேசிய நெடுஞ்சாலை வழியாக நடந்துசெல்லும் தொழிலாளர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கி உதவுமாறு அனைத்துச் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரையும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், சொந்த ஊருக்குச் செல்வதற்காகப் புறப்பட்டு வழியில் சிக்கித் தவிப்போருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதேபோல டெல்லி அருகே நொய்டாவில் வாடகை வீட்டில் குடியிருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதக் காலத்துக்கு வாடகை கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments