கொரோனா தடுப்பு பணி : தமிழகம் முன்மாதிரி மாநிலம்..!

0 726

கொரோனா தடுப்பு பணியில், பிற மாநிலங்களுக்கு தமிழகம் முன் மாதிரியாக திகழ்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி செட்டிப்பாளையம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் தாலுகாவில் தனது சொந்த செலவில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை நேரில் சென்று வழங்கிய பின், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், தனியார் பள்ளிகள், மாணவர் சேர்க்கை, கட்டண வசூல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து தகவல் கிடைத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments