கொரோனா நோயாளிகளுக்காக தனிமை வார்டுகளாக மாற்றப்படும் ரயில் பெட்டிகள்

0 3969

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரயில் பெட்டிகளை தனிமை வார்டுகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து அனைத்து ரயில் சேவைகளும் ஏப்ரல் 14 வரை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு ஐ.சி.யுக்களாக பயன்படுத்த ரயில் பெட்டிகள் மற்றும் கேபின்களை வழங்குவதற்கான திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரியத்தின் தலைவர் வி.கே. யாதவ், பொது மேலாளர்கள் மற்றும் பிரதேச ரயில்வே மேலாளர்கள் விவாதித்தனர்.

இக்கூட்டதில் வென்டிலேட்டர்கள், படுக்கைகள், தள்ளுவண்டிகள் போன்ற உபகரணங்களை உற்பத்தி செய்ய ரயில்வே பெட்டிகளை எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும் கழிப்பறைகளைக் கொண்ட ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாகப் பயன்படுத்தும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments