ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு குறைவு?

0 2137

சீனாவுடன் 4 ஆயிரத்து 209 கி.மீ நீள எல்லையை பகிர்ந்து கொள்ளும் அண்டை நாடான ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு மிகக்குறைவாக இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பு குறைவான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்திலுள்ள நிலையில், ரஷ்யா இரண்டாமிடத்தில் உள்ளது. சீனா மட்டுமின்றி கொரோனாவல் பாதிக்கப்பட்ட 14 நாடுகளுடன் எல்லையை பகிரும் ரஷ்யாவில், அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே குறைவான பாதிப்புக்கு காரணம்.

சீனா உட்பட 15 நாடுகளுக்கு வைரஸ் பரவிய போதே, ஜனவரி 30ம் தேதி சீனாவுடனான எல்லையை மூடிய ரஷ்யா, அப்போதே தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களையும் உருவாக்கியது. பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டதோடு, வெளிநிகழ்ச்சிகள், பொதுமக்கள் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் சமூக அளவில் கொரோனா பரவுவது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கொண்டு பரவாமல் தடுப்பதற்காக அனைத்து வெளிநாட்டினரும் ரஷ்யா வருவதற்கு மே 1ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments