கொரோனா பரவலைத் தடுக்க இடைவெளிவிட்டுக் கடைக்கு வர அறிவுரை

0 2092

கடைகளுக்குப் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் இடைவெளியைப் பராமரிப்பதற்கு வட்டமிட்டு நிற்க வைக்கும் முறை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க 21நாள் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் மக்களுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றிக் கிடைப்பதற்காகக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் ஒரு மளிகைக் கடையில் பொருட்களை வாங்க வரும் மக்கள் ஒருவருக்கொருவர் தேவையான இடைவெளியில் நிற்க வேண்டும் என்பதற்காகத் தரையில் சுண்ணாம்பால் வட்டம் போட்டுள்ளனர். ஒவ்வொரு வட்டத்திலும் ஒருவர் நின்றுகொண்டு பொறுமையாகப் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள மளிகைக் கடையிலும் பொதுமக்கள் வரிசையாக இடைவெளிவிட்டு வந்துசெல்லும் வகையில் தரையில் வட்டம் போட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments