கொரோனா அச்சுறுத்தல்... டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டுக்கு தள்ளிவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோவில் நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி, ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 9ஆம் தேதி வரை, ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருவதால், ஒலிம்பிக் போட்டிகளை, ரத்து செய்ய வேண்டுமென ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட பல நாடுகள் வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளிவைக்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்டு, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, 2021 ம் ஆண்டு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Comments