மருத்துவ போரில் தமிழகம்.. கொரோனாவை துடைத்தெறிய மாவட்ட எல்லைகள் சீல்வைப்பு

0 6222

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தமிழகத்தில் 144 தடை உத்தரவு மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டு, பேருந்துகள், ஆட்டோக்கள், கால் டாக்சி வாகனங்கள் அனைத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி அறிவித்த " மக்கள் ஊரடங்கு " மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. மாவட்ட எல்லைகளை சீல் வைத்த அதிகாரிகள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கங்களை, ஆங்காங்கே முடக்கினர். ஆட்டோக்கள், கால் டாக்சிகள் என எந்த வொரு வாகனமும் ஓடவில்லை.

மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத்தியாவசிய இயக்கத்தை தவிர, மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்பட்டு விட்டது.

அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறி, மளிகை , இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன.

வங்கிகள், ஏடிஎம்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், கேஸ் நிரப்பும் மையங்கள், ஆம்புலன்ஸ் சேவைகள் வழக்கம் போல் இயங்கும்.

ஹோட்டல்களில், பார்சல் சாப்பாடு மட்டும் விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை விதித்துள்ள தமிழக அரசு, வீடுகளை விட்டு வெளியே தேவை இல்லாமல் நடமாடுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வெளியே தலை காட்டாமல், வீடுகளுக்குள் முடங்குமாறு, பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு, ஏப்ரல் 1 ம் தேதி அதிகாலை 6 மணி வரை நீடிக்கும். கொரானோவை துடைத்தெறியும் மருத்துவ போரில், தமிழகம் முழு மூச்சுடன் இறங்கி விட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments