அரசின் அறிவுறுத்தலை காற்றில் பறக்கவிட்ட அரசியல் கட்சியினர், விவசாயிகள்

0 19355

நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையைப் பிரித்து முதலமைச்சர் அறிவித்துள்ளதை கொண்டாடுவதாக எண்ணி, அங்கு அரசியல் கட்சியினர், விவசாயிகள் பலரும் கூட்டமாக சேர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டது கொரோனா பரவி வரும் சூழலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறையில் அதிமுகவினர், விவசாயிகள், வர்த்தகர்கள் என பலரும் சாலைக்கு வந்து பட்டாசுகள் வெடித்தும் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக பேருந்து நிலைய வாயிலில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்துள்ள நிலையில், மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

முக்கியமாக கை குலுக்குவதையே தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், கூட்டமாக சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை ஊட்டி கொரோனாவின் தீவிரத்தை உணராமல் நடந்து கெண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments