எனக்கு கொரோனா வந்தாலும் வெளியுறவுத்துறை செயலர் நாட்டை நிர்வகிப்பார்- பிரிட்டன் பிரதமர்

0 44356

ஒருவேளை தமக்கு கொரோனா தொற்று வந்தாலும், நாட்டின் வெளியுறவுத்துறை செயலர் டாம்னிக் ராப் (Dominic Raab) பிரிட்டனை நிர்வகிப்பார் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தொலைக்காட்சியில் பேசிய அவர், 3 வார காலங்களுக்கு பிரிட்டன் முடக்கப்படுவதாக அறிவித்ததார். பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் கூடுவது தடைசெய்யப்படுகிறது எனவும், உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். பிரிட்டனில் இதுவரை கொரோனா பாதிப்பால், 335 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments