இன்றுடன் நிறைவு பெறுகிறது பிளஸ் 2 பொதுத்தேர்வுகள்

0 1968

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மாலை முதல் 144 தடை உத்தரவு அமலாகிறது. இந்நிலையில் 12ஆம் வகுப்பிற்கு இன்று கடைசி தேர்வு என்பதால் ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடைபெற்றது.உயர்நீதிமன்ற உத்தரவின்படி அரை மணி நேரம் தாமதமாக, காலை 10:30 மணிக்கு தேர்வுகள் துவங்கின.

கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்த பின்னரே மாணவ-மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இன்றுடன் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவடைவதால், மாணவர்கள் மை அடிப்பது, சாயம் பூசுவது போன்ற செயல்களில் ஈடுபடாமல் பாதுகாப்பாகவும், விரைவாகவும் வீடுகளுக்கு செல்ல மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். மாணவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணிக்க ஆசிரியர்கள் மற்றும் காவலர்கள் பள்ளிக்கு வெளியே கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.


SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments