ஹாலிவுட் நடிகரான இட்ரிஸ் எல்பாவின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி

0 896

பிரபல ஹாலிவுட் நடிகரான இட்ரிஸ் எல்பாவின் (Idirs Elba) மனைவி சாப்ரினாவுக்கு (Sabrina) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

ஏற்கனவே, நடிகர் இட்ரிஸ் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது அவரது மனைவிக்கும் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. எல்பா தனிமைப்படுத்தலில் இருந்த போது, மனைவி சாப்ரினாவும் கூடவே இருந்துள்ளார்.

இதனால், இவருக்கும் தொற்று பரவியுள்ளது. இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பேசிய அவர்கள் பல உருக்கமான தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளனர். 

தனி அறையில் தனிமைப்படுத்தி கொள்ளுதலை விரும்பவில்லை என கூறியுள்ள சாப்ரினா, எப்போதும் கணவர் எல்பாவுடனே இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments