11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

0 1723

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 3 தேர்வுகளே மீதம் உள்ளதால்,  திட்டமிட்டபடி 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.  மேலும்  பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று 11-ம் வகுப்பு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதப் பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. நாளை 12-ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும், 26-ம் தேதி 11-ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற உள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments