புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு

0 10252

நாடு முழுவதும் நாளை, ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்குக்கு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, புதுச்சேரியிலும், ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட உள்ளது. இதனை. புதுச்சேரி-சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். வருகிற 31 -ம் தேதி வரை, புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் அவர் அறிவித்தார்.

10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வரை, யாரும் வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர்,வெளிநாடுகளில் இருந்து ஆரோவில்லுக்கு வர, தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். புதுச்சேரி முழுவதும் நாளை, மதுபான கடைகள் மூடப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments