9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டு தேர்வை ரத்து செய்க- ராமதாஸ்

0 1597

தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஆண்டு தேர்வுகளை ரத்து செய்து, அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் வருகிற 27ஆம் தேதி தொடங்கவிருந்த 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள ராமதாஸ், பாமக தெரிவித்த யோசனைப்படி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தமிழக அரசு ஒத்திவைத்துள்ளதாகவும், தமிழக அரசின் இச்செயல் பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

9ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், ஆண்டு தேர்வுகளை ரத்து செய்து அவர்களை தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments