தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 6 ஆக உயர்வு

0 19559

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

சீனாவில் இருந்து பல நாடுகளுக்கும் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் மூவருக்குக் கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவருக்கும், நியூசிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இவர்களுக்குத் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதித்த 5 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். ஒருவர் டெல்லியில் இருந்து வந்தவர். உள்நாட்டில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நோய் பரவவில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுடன் விமானத்திலும் பேருந்திலும் பயணம் செய்தவர்களின் பட்டியலைப் பெற்று, அவர்களைத் தனிமையில் வைத்துக் கண்காணிக்க நடவடிக்கை எடுத்துவருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments