மெரீனா கடற்கரையில் மக்களுக்கு அனுமதி இல்லை?

0 1419

சென்னை மாநகருக்கு அழகுக்கு அழகு சேர்க்கும் மெரீனா உள்பட 4 முக்கிய கடற்கரைகளிலும் பிற்பகல் 3 மணி முதல், பொதுமக்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மெரீனா, பெசன்ட்நகர், திருவான்மியூர் மற்றும் பாலவாக்கம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் இருந்தவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.

பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவித்துள்ள மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், மறு உத்தரவு வரும் வரை, இந்த தடை  அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments