வடமாநில இளைஞருடன் தொடர்பில் இருந்த 193 பேர் கண்டுபிடிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 7912

டெல்லி மற்றும் அயர்லாந்தில் இருந்து கொரோனா அறிகுறியுடன் சென்னை வந்த இருவருடன் தொடர்பில் இருந்த 283 பேர் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு தொடர்பாக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து பேசுகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை தெரிவித்தார்.

மாவட்டங்களில் இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் வெண்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் அமைக்கவும், ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை மையம் அமைத்து, ஓய்வுபெற்ற மருத்துவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments