கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் இருந்த இருவர் தப்பியோட்டம் - கைது

0 8928

கேரளாவில் கொரோனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பேர் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்றதால் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

சிகிச்சை பெறும் நிலையில் தப்பிச் சென்றால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வளைகுடாவில் இருந்து வந்த இரண்டு பயணிகளுக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்கள் வயநாடு பகுதியில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தப்பிச் சென்றதையறிந்த போலீசார அவர்களை தேடிய நிலையில் ஒரு பொது நிகழ்ச்சியில் இருவரும் சிக்கினர்.

அவர்களை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர். இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக கேரள சுகாதார அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments