இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

0 10682

நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரபடுத்தியுள்ளன.

நாடுமுழுவதும் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது வரை 4 பேர் உயிரிழந்த நிலையில் மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், இமாச்சலப் பிரதேசம் , ஒடிசா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் புதிதாக பலருக்கு நோய் பாதிப்பு கணடறியப்பட்டதில் 236 பேருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

அதிகபட்சமாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 56 பேருக்கு நோய் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மும்பை, புனே, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் மிக்க இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

அத்தியாவசியப் பொருட்கள் தவிர வேறு எந்த கடையும் திறக்கக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து தனியார் அலுவலகங்களும் இம்மாதம் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை 25 முதல் 50 சதவீதம் வரை இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியிலும் அனைத்து வணிக வளாகங்கள், கடைகளையும் 3 நாட்களுக்கு மூட கெஜ்ரிவால் அரசு உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் தவிர இதர சிகிச்சைகள் யாவும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர், திருப்பதி ஏழுமலையான், மதுரை மீனாட்சி, ஷிர்டி சாய்பாபா, வைஷ்ணவோ தேவி, மும்பை சித்தி விநாயகர் உள்ளிட்ட புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments