ஒரேநாள் வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.32 லட்சம் கோடி லாபம்

0 8785

இந்தியப் பங்குச் சந்தைகள் 4 நாட்கள் தொடர் வீழ்ச்சிக்கு பின்னர் இன்று எழுச்சியடைந்த நிலையில் முதலீட்டாளர்கள் இன்று ஒரேநாள் வர்த்தகத்தில் 6,32 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் அடைந்தனர்.

கொரோனா வைரஸ் உள்ளிட்ட காரணங்களால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடவை அடுத்து பல்வேறு பங்குச் சந்தைகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக தினமும் சுமார் 2 ஆயிரம் புள்ளிகள் வரை சரிவை சந்தித்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுவந்தது.

இந்நிலையில் நேற்று 28,288 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில் இன்று உயர்வுடன் தொடங்கி தொடர்ந்து உயர்ந்தது. அதிகபட்சமாக 2,130 புள்ளிகள் உயர்ந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1627 புள்ளிகள் உயர்வுடன் 29,916-ஆக உள்ளது. நிஃப்டி 482 புள்ளிகள் உயர்வுடன் 8745-ஆக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments