கல் எறிந்து விளையாடும் குடிகார சைத்தான்கள்..! கொரோனால்லாம் மேட்டரே இல்ல

0 5752

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையில் குடிபோதையில் இருவர் ஒருவர் மீது ஒருவர் கல் எறிந்து விபரீத விளையாட்டில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையாக டாஸ்மாக் பார்கள் பூட்டப்பட்டுள்ளது.

ஆனால் டாஸ்மாக் கடைகளுக்கும், குடிமகன்களுக்கும் இன்னும் விடுமுறை விடப்படவில்லை..!

அதுவும் பெரும்பாலான ஊர்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்துக்கு முன்னதாகவே மதுப்பாட்டில்கள் தங்கு தடையின்றி கள்ளசந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டையில் காலையிலேயே சுதி ஏத்திக் கொண்ட இரு குடிகார வித்வான்கள், ஒருவர் மீது ஒருவர் கல் எறிந்து சாகசம் செய்தனர்.

வெள்ளை சட்டை போட்ட வேதாளத்தின் குறி பலமுறை தப்பினாலும், சில எறிகள் சரியாக மண்டையை பிளந்தது

அதே நேரத்தில் சிவப்பு சட்டை போட்ட போராளியோ ரத்தம் சொட்டிய நிலையிலும் திரும்பி தாக்குவதா வேண்டாமா என சிந்தித்துக் கொண்டே திருப்பி தாக்கினார்..!

இதனால் சாலையில் சென்ற பேருந்து மற்றும் கார்கள் அப்படியே நிறுத்தப்பட்டது. இருவருக்கும் கல் எறியில் கிடைத்த ரத்தகாயங்களுடன் அடுத்த ரவுண்டுக்கு தயாரானார்கள்.

2வது ரவுண்டில் மல்யுத்தத்தில் ஈடுபட இரு குடிகார சைத்தான்களும் அடியின் வலி தாங்க இயலாமல் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர்.

இந்த காட்சிகளை பார்த்த அப்பகுதி மக்கள் குடிபோதை கொரோனாவ விட கொடியதாக இருக்கும் போல என தலையில் அடித்துக் கொண்டே சென்றனர்.

சட்டவிரோதமாக டாஸ்மாக் சரக்கு விற்பனையை தடுத்து நிறுத்தினால் இவர்களைப்போல முழு நேர குடிகாரர்களின் அலப்பறைகள் அடங்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments