கொரோனா பரவல் எப்போது உச்சத்தை அடைந்து, தணியத் தொடங்கும்? ஆய்வுகளில் முன்கணிப்புகள்

0 64105

கொரோனா வைரஸ் பரவல் எப்போது உச்சத்தை அடைந்து, தணியத் தொடங்கும் என்பது தொடர்பான ஆய்வுகளில் வெவ்வேறு விதமான முன்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் சீனாவில் இந்நோய்க்கு 65 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துவிட்டால், அதன் பிறகு குறையத் தொடங்கிவிடும். எனவே, இதுதொடர்பான ஆய்வுகள் சீனாவிலும், சீனாவுக்கு வெளியேயும் மேற்கொள்ளப்படுகின்றன.

பிப்ரவரி இறுதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டு விடும் என்று, 2003ஆம் ஆண்டில் சார்ஸ் கொரோனா வைரஸை கண்டறிந்த மருத்துவ அறிஞர் Zhong Nanshan தலைமையிலான குழு, கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி தெரிவித்திருந்தது.

இதற்கேற்ப சீனாவில் கொரோனா தொற்று மார்ச்சில் தணிந்துள்ளது. அதேசமயம், கொரோனா வைரஸ் பரவல் இனிமேல்தான் உச்சத்தை தொடும் என லண்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. பரவலின் உச்சத்தில், வூகான் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் என்ற கணக்கில், அதாவது 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கட்டுப்பாடுகளை தளர்த்தினால், கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் என மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. சீன நகரங்களில் மக்கள் பணிகளுக்கு செல்லத் தொடங்கிவிட்ட நிலையில், வைரஸ் பரவல் புதிதாக அதிகரிக்கக் கூடும் என ஜப்பானின் ஹொக்கிடோ பல்கலைக்கழக (Hokkaido University)ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த ஆய்வாளர்கள் மார்ச் மற்றும் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் வைரஸ் பரவல் உச்சத்தை அடையலாம் என்றும், சீனாவில் 55 கோடி பேர் முதல் 65 கோடி பேர் வரை பாதிக்கப்படலாம் என்றும் கணித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments