நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறையின் கீழ் புதிய திட்டங்கள்

0 1610

நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் கீழ் 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,109 கிலோமீட்டர் சாலைகள், உலக வங்கி நிதியுதவியுடன், 1500 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என்றும் 18 மாவட்டங்களில், 310 கோடி ரூபாயில் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் 54 ஆற்றுப்பாலங்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். வண்டலூர் சந்திப்பில் 16 கோடியே 71 லட்சம் ரூபாயில் பாதசாரிகளுக்கான மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதேபோன்று பொதுப்பணித்துறை சார்பில் தருமபுரி, கன்னியாக்குமரி, தஞ்சை, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 486 கோடியே 50 இலட்சம் ரூபாயில் நீரேற்று திட்டங்களை முதலமைச்சர் அறிவித்தார்.

302 கோடியே 90 இலட்சம் ரூபாயில் மதுராந்தகம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, மற்றும் மாதவரம் ஏரி ஆகிய ஏரிகளை மேம்படுத்தி, புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

அரியலூர், கோவை, திண்டுக்கல், மதுரை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட 28 மாவட்டங்களில் 582 கோடியே 18 லட்சம் ரூபாயில் தடுப்பணைகள், அணைக்கட்டுகள், படுகை அணைகள் மற்றும் தள மட்ட சுவர்கள் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.

3,300 கோடிரூபாயில் கால்வாய்களை பழுது பார்த்தல், புதிய பாசன திட்டங்களுக்கான ஆய்வு பணிகள், புதிய கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட அறிவிப்புகளையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments