டெல்லியிலுள்ள தனிமைபடுத்தும் முகாம்களில் சுகாதாரம் இல்லை..?

0 519

கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைபடுத்தும் முகாம்களில் போதிய சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது.

இதன் காரணமாக இம்முகாம்களிலிருந்து சிலர் தப்பித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2ம் தேதி அங்கு முதல்நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து 3 நட்சத்திர விடுதிகள் உட்பட 8 தனித்த முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.

அந்த 3 ஹோட்டல்களையும் தவிர்த்து மீதமுள்ள 5 முகாம்களும் இலவச சேவைகளை அளித்து வரும் சூழலில், அவற்றில் 180 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அந்த முகாம்களில் சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகள் இல்லை என புகார் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments