வெளிநாடுகளில் இந்தியர்கள் 276 பேர் பாதிப்பு

0 859

வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களில் 276 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் சார்பில் எழுத்துமூலம் பதிலளிக்கப்பட்டது. அதில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் 276 பேருக்குக் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஈரானில் உள்ள இந்தியர்களில் 255 பேரும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 12 பேரும், இத்தாலியில் 5 பேரும், ஹாங்காங், குவைத், ருவாண்டா, இலங்கை ஆகிய நாடுகளில் ஒவ்வொருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments