ஒருவாரகாலமாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர்வு

0 940

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 384 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

அந்த வகையில் நேற்று 3,820 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் ஆபரணத்தங்கம் இன்று 48 ரூபாய் உயர்ந்து 3,868 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று 30 ஆயிரத்து 560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத்தங்கம் இன்று 384 ரூபாய் விலை உயர்ந்து 30 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியும் நேற்றைக் காட்டிலும் விலை உயர்ந்துள்ளது. பார்வெள்ளி ஒரு கிலோ 900 ரூபாய் உயர்ந்து 39 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments