உலக சுகாதார அமைப்பின் தலைமையக ஊழியர்கள் 2பேருக்கு கொரோனா பாதிப்பு

0 949

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் 2பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்தவாரம் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேரும் விடுமுறையில் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த இதர பணியாளர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு, முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments