கொரோனா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி !

0 2752

கொரோனா குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து சரியான தகவல்களை மக்களுக்கு வழங்கும் வகையில் குறுஞ்செய்தி சேவை ஒன்றை கேரள அரசு துவக்கி உள்ளது.

இதற்காக 830 220 1133 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். அதன் வழியாக அழைக்கும் நபரின் செல்போன் எண் பதிவு செய்யப்பட்டு, கொரோனா குறித்த லேட்டஸ்ட் தகவல்கள், அரசு அறிவிப்புகள், வழிகாட்டல்கள் உள்ளிட்டவை குறுஞ்செய்திகளாக அனுப்பப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் முகநூலில் தெரிவித்துள்ளார்.

கொரோனா குறித்த தகவல்களை அறிந்து கொள்ள கேரள அரசு ஏற்கனவே GoK Direct என்ற பெயரில் செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments